Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு 100-யைக் கடந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு 100-யைக் கடந்த கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Corona Virus | தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 100-யைக் கடந்துள்ளது.

    இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. இருப்பினும், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். கடந்த ஜனவரியில் தாக்கிய கொரோனா மூன்றாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அதனையடுத்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.

    அதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 100-யைக் கடந்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 14,049 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 34,55,613 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 52 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதுவரையில் கொரோனா பாதித்து 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 59 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தந்தூரி சிக்கன் சாப்பிட பிளஸ் 2 மாணவன் உயிரிழப்பு: ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் புகார்- ஆரணியில் பரபரப்பு

    தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 100-யைக் கடந்துள்ளது. வட மாநில மாணவர்களால் கொரோனா வைரஸ் பரவுகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine

    அடுத்த செய்தி