தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு- 38 பேர் உயிரிழப்பு

மாதிரி படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,67,401 ஆக அதிகரித்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடியது. கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது நாள் ஒன்றுக்கு 35,000 பேர்வரை பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து, தமிழ்நாடு அரசு எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதிப்பு குறையத்தொடங்கியது. தற்போது நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 2,000-க்கும் குறைவாக உள்ளது.

    இருப்பினும், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெல்லமாக அதிகரித்துவருகிறது. இந்தநிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,55,965 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, மொத்த பாதிப்பு 25,67,401 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,011 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், கொரோனா பாதிப்பு குணமடைந்து 25,13,087 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,197 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்து தற்போது 20,117 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இன்று மட்டும் சென்னையில் 189 பேருக்கும், கோயம்புத்தூரில் 226 பேருக்கும், செங்கல்பட்டில் 114 பேருக்கும், ஈரோட்டில் 154 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று, 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 39 பேருக்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
    Published by:Karthick S
    First published: