• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் தொடர்ந்து 3-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் தொடர்ந்து 3-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்துவருகிறது.

    தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்புகளைவிட இரண்டாவது அலையில் அதிக அளவிலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 35,000 பேர் வரை நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்து, தமிழக அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

    தொடர்ந்து குறைந்துவந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மூன்று தினங்களாக மெல்லமாக அதிகரித்துவருகிறது. இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,60,897 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 25,59,597 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,178 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,04,805 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,076 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து தற்போது 20,716 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 204 பேருக்கும், கோயம்புத்தூரில் 246 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 165 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: