• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 4வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: 2 ஆயிரத்தை நெருங்கியது!

தமிழகத்தில் 4வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: 2 ஆயிரத்தை நெருங்கியது!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

கொரோனா பாதித்து தற்போது 20,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 175 பேருக்கும், கோயம்புத்தூரில் 230 பேருக்கும், செங்கல்பட்டில் 133 பேருக்கும், ஈரோட்டில் 180 பேருக்கும்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில்  மார்ச் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா 2வது அலை கடந்த மே, ஜூன் மாதங்களில் உச்சம் தொட்டது.  அதன் பின்னர் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. தற்போது, 2 ஆயிரத்துக்கு கீழாக தினசரி கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனினும் கடந்த சில நாட்களாக தினசரி  கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,57,927 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,988 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில்,இரண்டு பேர் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வந்தவர்கள் ஆவர்.

    இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி உத்தரவு!


    இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 25,61,587 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 2,156 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,06,961 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 6 பேர் தனியார் மருத்துவமனைகளில் 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிர் இழந்துள்ளனர்.  இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 34,102 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் படிக்க: கட்டாய கொரோனா பரிசோதனைக்கு அஞ்சி ஒரு வழிச்சாலை வழியாக தப்பிச் செல்லும் வாகன ஓட்டிகள்!


    கொரோனா பாதித்து தற்போது 20,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 175 பேருக்கும், கோயம்புத்தூரில் 230 பேருக்கும், செங்கல்பட்டில் 133 பேருக்கும், ஈரோட்டில் 180 பேருக்கும்  தஞ்சாவூரில் 126 பேருக்கும்  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: