தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு: 3,617 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு: 3,617 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா பரிசோதனை
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1,38,470ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 15,42,234 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 4,244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,966 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3,617 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


இதுவரையில் 89,532 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,168 பேருக்கும், செங்கல்பட்டில் 245 பேருக்கும், கோயம்புத்தூரில் 117 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 385 பேருக்கும், மதுரையில் 319 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading