தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு: 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு: 114 பேர் உயிரிழப்பு
மாதிரி படம் (AP)
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறைஅறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 67,153 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 32,92,958 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 3,02,815 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 5,041 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 976 பேரும், செங்கல்பட்டில் 483 பேரும், கோயம்புத்தூரில் 292 பேரும், கடலூர் 287 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading