தமிழகத்தில் 32,000-த்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - 288 பேர் உயிரிழப்பு

மாதிரி படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், தமிழக அரசு கொரோனா பாதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,042 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 31,892 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,31,377 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 20,037 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 13,18,982 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. இன்று மட்டும் 288 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 17,056 ஆக அதிகரித்துள்ளது.

  இன்று மட்டும் சென்னையில் 6,538 பேருக்கும், செங்கல்பட்டில் 2,225 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,197 பேருக்கும், கன்னியாகுமரியில் 1,025 பேருக்கும், மதுரையில், 1,250 பேருக்கும், திருநெல்வேலியில் 831 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: