தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமாக இருந்தது. அதன்காரணமாக ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மூன்றாவது அலையின் பாதிப்பு தீவிரமாக இல்லாத நிலையில் தமிழகம் உடனே இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இந்தநிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 17,122 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 686 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,61,560 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 257 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இன்று மட்டும் சென்னையில் 294 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும், கன்னியாகுமரியில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.