தமிழகத்தில் 30,000-த்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 298 பேர் உயிரிழப்பு

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29,247 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 298 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதேபோல, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் இருந்துவருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக கொரோனா பாதிப்பு 30,000-த்தை நெருங்கியுள்ளது. உயிரிழப்பும் 300-யை நெருங்கியுள்ளது.

  இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் 1,56,111 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 29,272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 14,38,509 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 19,182 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

  அதன்மூலம் இதுவரையில் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 12,60,150 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 298 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 16,178 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 7,466 பேருக்கும், செங்கல்பட்டில் 2,419 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,650 பேருக்கும், மதுரையில் 1,024 பேருக்கும், திருவள்ளூரில் 1,204 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: