Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 3,000-ஐ நெருங்கும் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 3,000-ஐ நெருங்கும் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,062 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கடந்த ஆறு மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதிம் 10 சதவீதத்தைக் கடந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று மட்டும் 30,499 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,90,834 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து கொரோனா பாதித்து 17,717 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,791 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 1,062 பேருக்கும், செங்கல்பட்டில் 403 பேருக்கும், கோயம்புத்தூரில் 127 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி