தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியிருந்தது. நாள் ஒன்றுக்கு 30,000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுவந்தனர். இந்தநிலையில், கொரோனா பாதிப்பு வேகம் கட்டுக்குள் வந்தது. அதனையடுத்து, தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டன. தற்போது, கொரோனா பாதிப்பு மெல்லமாக குறையத் தொடங்கியுள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,35,991 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 26,533 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 32,79,284 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து மொத்தம் 2,11,863 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 28,156 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,460 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 5,246 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,448 பேருக்கும், செங்கல்பட்டில் 1,662 பேருக்கும், ஈரோட்டில் 1,261 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.