தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 945 பேர் பாதிப்பு

கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,000-த்தை நெருங்கியுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்த முடியாமல் இருந்துவருகிறது. அதனையடுத்து, பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்திலும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

  கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 8,62,374 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 71,888 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 1,81,66,462 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 12,564 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 395 பேருக்கும், செங்கல்பட்டில் 103 பேருக்கும், கோயம்புத்தூரில் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: