தமிழகத்தில் நீண்ட நாளுக்குப் பிறகு 10,000-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

மாதிரி படம்

தமிழ்நாட்டில் நீண்ட நாளுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தைத் தொட்டபோது நாள் ஒன்றுக்கு 36,000 பேர் வரைக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். பின்னர், மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியது. தற்போது, தினசரி கொரோனா பாதிப்பு அளவு முற்றிலும் கட்டுக்குள் வந்துள்ளது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,75,010 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 9,118 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழ்நாடு மொத்த பாதிப்பு 23,97,864 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 22,720 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுவரையில், கொரோனா பாதிப்பு குணமடைந்து 22,66,793 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் மூலம் மொத்த உயிரிழப்பு 30,548 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 559 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,227 பேருக்கும், ஈரோட்டில் 1,041 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: