Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

தமிழ்நாட்டின் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 7,000-த்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்துவருவது ஆறுதல் தரக் கூடிய ஒன்றாக உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,15,822 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதில், 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,10,882 பேராக அதிகரித்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 1,21,828 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 23,144 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.

    இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,759 பேராக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 972 பேருக்கும், கோயம்புத்தூரில் 911 பேருக்கும், ஈரோட்டில் 397 பேருக்கும், செங்கல்பட்டில் 531 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி