தமிழ்நாட்டில் 2,500-க்கும் குறைந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு

மாதிரி படம்

தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,500-க்கும் குறைந்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 55 பேர் உயிரழிந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தற்போது இந்த பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,45,387 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 2,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,26,401 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 3,021 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 24,62,244 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,557 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோயம்புத்தூரில் 270 பேருக்கும், ஈரோட்டில் 175 பேருக்கும், சென்னையில் 153 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: