Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் 10,000-க்கும் கீழ் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் 10,000-க்கும் கீழ் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 9,916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 10,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,20,211 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதில், 9,916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 33,97,238 ஆக அதிகரித்துள்ளது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 1,55,329 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 21,435 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,696 பேராக அதிகரித்துள்ளது.

    இன்று மட்டும் சென்னையில், 1,475 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,224 பேருக்கும், செங்கல்பட்டில் 983 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி