தமிழகத்தில் நான்காவது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு- 468 பேர் உயிரிழப்பு

மாதிரி புகைப்படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 468 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இருப்பினும், கடந்த மூன்று தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. கடந்த, 21-ம் தேதி உச்சபட்சமாக ஒருநாள் பாதிப்பு 36184 ஆக இருந்தது.

    இந்தநிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,62,284 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 34,285 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 19,11,496 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 28,745 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரையில், 15,83,504 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 468 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 21,340 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 4,041 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,632 பேருக்கும், செங்கல்பட்டில் 1,870 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: