Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 23,000-த்துக்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: அதிகரிக்கும் குணமடைபவர்கள் எண்ணிக்கை

தமிழகத்தில் 23,000-த்துக்கும் குறைந்த கொரோனா பாதிப்பு: அதிகரிக்கும் குணமடைபவர்கள் எண்ணிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 463 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா இரண்டாவது அலை தற்போது கடந்த ஒரு வார காலமாக மெதுவாக குறைந்துவருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு வார காலமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது நாளுக்கு நாள் குறைந்துவருவதால் தளர்வுகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தநிலையில், கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,63,818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 22,651 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 21,95,402 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 33,646 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுவரையில், 19,00,306 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 463 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 26,128 பேராக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 1,971 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,810 பேருக்கும், ஈரோட்டில் 1,619 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Corona Vaccine, CoronaVirus

    அடுத்த செய்தி