தமிழகத்தின் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,500-ஆக குறைவு - 48 பேர் உயிரிழப்பு

மாதிரி படம்

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு 2,500-ஆக குறைந்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. தற்போது இந்த பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    இந்நிலையில், இன்றைய பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,39,113 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 2,505 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,23,943 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று 3,058 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் கொரோனா பாதிப்பு குணமடைந்து 24,59,223 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 33,502 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 160 பேருக்கும், செங்கல்பட்டில் 135 பேருக்கும், கோயம்புத்தூரில் 282 பேருக்கும், ஈரோட்டில் 187 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 31,218 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்துவருகின்றனர’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: