முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 28 லட்சத்தைக் கடந்த மொத்த கொரோனா பாதிப்பு- இன்று மட்டும் 12,895 பேர் பாதிப்பு

28 லட்சத்தைக் கடந்த மொத்த கொரோனா பாதிப்பு- இன்று மட்டும் 12,895 பேர் பாதிப்பு

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

Corona virus | தமிழ்நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 28 லட்சத்தைக் கடந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,48,308 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே 12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,00,286 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவை முடக்கும் ஒமைக்ரான் பாதிப்பு... நிரம்பிய மருத்துவமனைகளால் பொதுமக்கள் அவதி

இதன்மூலம் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 51,335 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,808 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,855 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 6,186 பேருக்கும், செங்கல்பட்டில் 1,512 பேருக்கும், திருவள்ளூரில் 702 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: CoronaVirus