• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்துவரும் கொரோனா பாதிப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 483 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் புரட்டிப் போட்டுவிட்டது. இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு முழுவதுமாக சிதைந்தது. கொரோனா இரண்டாவது அலை உச்சத்தைத் தொட்டபோது நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 4 லட்சத்துக்கும் அதிகமாகப் பதிவானது.

    தற்போது, நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் குறைந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, இரண்டாவது அலையின் வீரியம் குறைந்துவருகிறது. நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 35,000-க்கும் கூடுதலாக பதிவான நிலையில், தற்போது 25,000-வரையில் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,74,329 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 25,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 21,48,346-ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 32,263 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 18,34,439 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 483 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 25,205-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில், 2,217 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,061 பேருக்கும், ஈரோட்டில் 1,488 பேருக்கும், கன்னியாகுமரியில் 826 பேருக்கும், செங்கப்பட்டில் 996 பேருக்கும், திருப்பூரில் 1,252 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: