தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,596 பேருக்கு கொரோனா பாதிப்பு: 166 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து குறைந்தவருகிறது. தமிழ்நாட்டின் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,66,628 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 6,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 24,43,415 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 10,432 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுவரையில், 23,58,785 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதித்து வீடு மற்றும் மருத்துவமனையில் 52,884 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 166 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 31,746 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கோயம்புத்தூரில் 793 பேருக்கும், சென்னையில் 396 பேருக்கும், ஈரோட்டில் 686 பேருக்கும், நாமக்கலில் 269 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: