தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,791 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,791 பேர் பாதிப்பு
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 27, 2020, 6:56 PM IST
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 94,200 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 68,88,043 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,80,808 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,706 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 5,25,154 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.


இன்று மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,313 ஆக அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: September 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading