தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேர் பாதிப்பு

தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேர் பாதிப்பு

கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 78,711 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 58,58,300 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 5,14,208 பேராக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 5,735 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

  இதுவரையில், 4,58,900 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 8,502 பேராக அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: