தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,589 பேர் பாதிப்பு

தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,589 பேர் பாதிப்பு

கோப்புப் படம்

 • Share this:
  தமிழ்நாட்டில் இன்று மட்டும் 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.


  தமிழகத்தில் இன்று மட்டும் 78,614 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 69,66,657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில், 5,86,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


  கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,554 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 5,30,708 பேர் வீடு திரும்பியுள்ளனர்.


  பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. (படம்: Reuters)
  கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 9,383 ஆக அதிகரித்துள்ளது.


  இன்று மட்டும் சென்னையில் 1,283 பேருக்கும், கோயம்புத்தூரில் 587 பேருக்கும், சேலத்தில் 256 பேருக்கும், திருவள்ளூரில் 249 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


   
  Published by:Karthick S
  First published: