தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேர் பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,546 பேர் பாதிப்பு
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 29, 2020, 6:30 PM IST
  • Share this:
தமிழகத்தில் கொரோன பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 84,163 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 70,50,820 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று மட்டும் 5,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,91,943 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 5,501 பேர் வீடு திரும்பியுள்ளனர்.


இதுவரையில், 5,36,209 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 9,453 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,277 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading