தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேர் பாதிப்பு

தொடர் உச்சத்தில் கொரோனா: தமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேர் பாதிப்பு
மாதிரி படம்
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 7:38 PM IST
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று மட்டும் 78,841 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில், 63,53,772 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில், 5,47,337 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து 5,492 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 4,91,971 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.


இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 8,871 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading