Home /News /tamil-nadu /

தமிழக மக்களுக்கு ஷாக்... ஒரே நாளில் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழக மக்களுக்கு ஷாக்... ஒரே நாளில் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

Corona cases | தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    Today Corona Cases in Tamil Nadu: இந்தியாவில் கடந்த ஆண்டு மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது கடந்த ஆண்டின் இறுதியில் முழுவதுமாக கட்டுக்குள் இருந்தது. நாடு இயல்பு நிலையை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் பரவல் தொடங்கியது. அதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் மூன்றாவது அலை தொடங்கியது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.

    இந்தநிலையில், இன்று யாரும் எதிர்பாராத அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 1,17,382 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    'கொரோனா தொடர்பான மருந்துகளை இருப்பில் வையுங்கள்' : மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்


     அதில், 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் தமிழ்நாட்டில் இதுவரையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,60,449 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 688 பேர் வீடு திரும்பியுள்ளனர்.


    தற்போது கொரோனா பாதிப்பு வீட்டு தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 16,577 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,814 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. அதில், 110 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus, Omicron

    அடுத்த செய்தி