தமிழகத்தில் ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 9 லட்சத்தைக் கடந்தது

தமிழகத்தில் ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 9 லட்சத்தைக் கடந்தது

கோப்புப் படம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக குறைந்ததிருந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த இருவாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் இதுவரையில் இல்லாத அளவுக்கு ஒரு லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக்கிவருகின்றன. இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிவிப்பில், ‘தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 79,442 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 3,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 9,03,479 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 1,842 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதன்மூலம் கொரோனா பாதிப்பு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,66,913-ஆக அதிகரித்துள்ளது.

    இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 12,789ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 1,335 பேருக்கும், செங்கல்பட்டில் 310 பேருக்கும், கோயம்புத்தூரில் 376 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: