தமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு: திருநெல்வேலி, தூத்துக்குடியில் அதிகரித்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 3,616 பேர் பாதிப்பு: திருநெல்வேலி, தூத்துக்குடியில் அதிகரித்த கொரோனா பாதிப்பு
(கோப்புப் படம்)
  • Share this:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தபாதிப்பு 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கைவெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ‘தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 35,423 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையில் 13,52,360 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் மொத்த பாதிப்பு 1,18,594 ஆக அதிகரித்துள்ளது. இன்று 65 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 1,636 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,545 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,203 ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டில் 87 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 106 பேருக்கும், கன்னியாகுமரியில் 119 பேருக்கும், மதுரையில் 334 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இல்லாத அளவாக தூத்துக்குடியில் 144 பேரும், திருநெல்வேலியில் 181 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகரில் 253 பேர் பாதித்துள்ளனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading