Home /News /tamil-nadu /

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் 26 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு: இன்று மட்டும் 26 பேர் உயிரிழப்பு

ஓமைக்ரான் தொற்று

ஓமைக்ரான் தொற்று

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,50,037 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 28,91,959 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,18,017 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 9,026 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்யியுள்ளனர். இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரழப்பு 36,956 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டில் தற்போதுவரையில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 241 ஆக உள்ளது. இன்று மட்டும் சென்னையில் 8,963 பேருக்கும், செங்கல்பட்டில் 2,504 பேருக்கும், கோயம்புத்தூரில் 1,564 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 802 பேருக்கும், திருவள்ளூரில் 1,393 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி