தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த நான்கு தினங்களுக்கும் மேலாக 24,000 என்ற அளவிலேயே உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,35,751 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 29,63,366 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் தற்போது 1,52,348 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 13,551 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்து நலமடைந்துள்ளனர்.
12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அரசு தகவல்
கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 37,009 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் சென்னையில் 8,591 பேருக்கும், செங்கல்பட்டில் 2,236 பேருக்கும், கோயம்புத்தூரில் 2,042 பேருக்கும், கன்னியாகுமரியில் 831 பேருக்கும், திருவள்ளூரில் 1,018 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.