தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு - 28 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. அதனைத்தொடர்ந்து, படிப்படியாக பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்தது. தற்போது, கொரோனா பாதிப்பு 2,000-த்தை நெருங்கிய நிலையிலையே தினமும் பதிவாகிவருகிறது.

    தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,62,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 25,81,094 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,917 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,26,317 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,395 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து கொரோனா பாதித்து தற்போது 20,382 பேர் சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இன்று மட்டும் செங்கல்பட்டில் 140 பேருக்கும், சென்னையில் 243 பேருக்கும், கோயம்புத்தூரில் 229 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: