• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ்நாட்டில் இன்று 1,929 பேருக்கு கொரோனா : கோவையில் தொடர்ந்து 200க்கும் மேல் பதிவாகும் தொற்று!

தமிழ்நாட்டில் இன்று 1,929 பேருக்கு கொரோனா : கோவையில் தொடர்ந்து 200க்கும் மேல் பதிவாகும் தொற்று!

கொரோனா

கொரோனா

கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 200க்கு அதிகமாகவே பதிவாகி வருகிறது. கோயம்புத்தூரில் இன்று 235 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் இன்று 1,929 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று காரணமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், மே மாதத்தில் இது உச்சமடைந்தது. அதனைத்தொடர்ந்து, படிப்படியாக பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 2 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    இன்றை கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,54,073 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒருவர் கேரளாவில் இருந்து  சாலை வழியாக தமிழகம் வந்தவர் ஆவர். அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,77,237 ஆக அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: எதிர்பார்த்ததைவிட வேகமாக ஏற்படும் புவிவெப்பமடைதல்: எச்சரிக்கும் சுற்றுசூழல் ஆர்வலர்கள்!


    இன்று மட்டும் கொரோனா பாதிப்பு குணமடைந்து 1,886 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,22,470 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,340 ஆக அதிகரித்துள்ளது.

    வீட்டுத் தனிமையையும் சேர்த்து தற்போது கொரோனா பாதித்து 20,427 பேர் சிகிச்சையில் இருந்துவருகின்றனர். கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 200க்கு அதிகமாகவே பதிவாகி வருகிறது. கோயம்புத்தூரில் இன்று 235 பேருக்கும் சென்னையில்  182 பேருக்கும்  ஈரோட்டில்  178 பேருக்கும் செங்கல்பட்டில் 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு திடீர் உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி!


    குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 4 பேருக்கும் தென்காசியில் 5 பேருக்கும்  பெரம்பலூர் மற்றும் தேனியில் தலா 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: