தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு - 23 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். தமிழக அரசு எடுத்த தீவிர நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தநிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்தது. தற்போது, நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,56,973 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 25,88,781 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,842 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதுவரையில், 25,33,804 பேருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,519 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து வீட்டு தனிமையையும் சேர்த்து தற்போது 20,458 பேர் சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இன்று மட்டும் சென்னையில் 216 பேருக்கும், கோயம்புத்தூரில் 225 பேருக்கும், ஈரோட்டில் 179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published: