தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் அளவு தற்போது 2,000-க்கும் குறைவாக பதிவாக வருகிறது. இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட கொரோனா அறிவிப்பின்படி, ‘தமிழகத்தில் இன்று 1,707 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழு லட்சத்து 64 ஆயிரத்தை கடந்தது.
சென்னையில் புதிதாக 471 பேருக்கும், மொத்தமாக 2,10,601 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் ஒரே நாளில் 1,263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக பெரம்பலூரில் இருவருக்கும், தென்காசியில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் மூவர் உட்பட மாநிலம் முழுவதும் 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 11,550-ஆக அதிகரித்துள்ளது. எனினும், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 2,251 பேர் குணமடைந்தனர்.
ஒரே நாளில் 66,365 பேருக்கும், மொத்தமாக 1,10,49,000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.