தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு- 26 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

 • Share this:
  தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,60,306 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,07,206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,816 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 25,54,323 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,814 ஆக அதிகரித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா பாதித்து தற்போது, 18,069 பேர் சிகிச்சையில் இருந்துவருகின்றனர். இன்று மட்டும் சென்னையில் 175 பேருக்கும், செங்கல்பட்டில் 113 பேருக்கும், கோயம்புத்தூரில் 216 பேருக்கும், ஈரோட்டில் 115 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  Published by:Karthick S
  First published: