தமிழ்நாடு கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,63,230 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்மூலம் மொத்த பாதிப்பு 26,10,299 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 1,768 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், கொரோனா பாதிப்பு குணமடைந்து 25,57,884 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 34,856 பேர் உயிரிழந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கொரோனா பாதித்து தற்போது 17,559 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 182 பேருக்கும், கோயம்புத்தூரில் 230 பேருக்கும், செங்கல்பட்டில் 122 பேருக்கும், ஈரோட்டில் 115 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.