Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா: சென்னையில் 632 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா: சென்னையில் 632 பேர் பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் மூன்றாவது அலை கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் வேகம் மெல்லமாக அதிகரித்துவருகிறது.

    கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படாத நிலையில் பொதுஇடங்களில் முகக்கவசம் கட்டாயப்படுத்தப்படுகிறது.

    இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 22,137 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1,484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,71,289 ஆக அதிகரித்துள்ளது.

    தற்போது கொரோனா பாதித்து வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து 8,970 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 736 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 632 பேருக்கும், செங்கல்பட்டில் 239 பேருக்கும், கோயம்புத்தூரில் 70 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி