தமிழகத்தில் 3-வது நாளாக ஆயிரத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 3-வது நாளாக ஆயிரத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு

கொரோனா

தமிழகத்தில் இன்று மட்டும் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பு தற்போது தொடர்ந்து குறைந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளது. அதனால், தமிழகத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது.

  கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தில் இன்று மட்டும் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 8,66,982 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 75,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  இன்று மட்டும் 668 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பினர். இன்று மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 466 பேருக்கும், செங்கல்பட்டில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 109 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: