Home /News /tamil-nadu /

கொரோனா பாதிப்பு: 5 வயது சிறுவன், 30 வயது பெண் உட்பட 19 பேர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு: 5 வயது சிறுவன், 30 வயது பெண் உட்பட 19 பேர் உயிரிழப்பு

Corona Deaths

Corona Deaths

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்திய அளவில் இன்று ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை இந்தப் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

    இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 1,54,935 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 28,47,589 ஆக அதிகரித்துள்ளது. அதனால், கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 88,959 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,039 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

    தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 17,934 பேர் பாதிப்பு


    கொரோனா பாதித்து இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,905 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 7,372 பேருக்கும், செங்கல்பட்டில் 1,840 பேருக்கும், கோயம்புத்தூரில் 981 பேருக்கும், திருவள்ளூரில் 931 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


    தமிழ்நாட்டு அளவில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்தநிலையில் இன்று இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 19 பேர் கொரோனா பாதித்து உயிர் இழந்துள்ளனர். 5 வயது சிறுவன், 30 வயது பெண் உட்பட 19 பேர் கொரோனாவால் இன்று உயிரிழந்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி