ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 17,934 பேர் பாதிப்பு

தமிழகத்தில் புதிய உச்சத்தில் கொரோனா: ஒரே நாளில் 17,934 பேர் பாதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Corona | தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் மட்டும் கொரோனா பாதித்து 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,905 ஆக அதிகரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 1,54,935 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும்- மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

   அதன்மூலம் மொத்த பாதிப்பு 28,47,589 ஆக அதிகரித்துள்ளது. அதனால், கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 88,959 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,039 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

  அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 36,905 ஆக அதிகரித்துள்ளது.

  இன்று மட்டும் சென்னையில் 7,372 பேருக்கும், செங்கல்பட்டில் 1,840 பேருக்கும், கோயம்புத்தூரில் 981 பேருக்கும், திருவள்ளூரில் 931 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: CoronaVirus