Home /News /tamil-nadu /

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது

கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பைத் தொடர்ந்து தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.

    பொது இடங்களில் முகக்கவசம் இல்லாவிட்டால் 500 ரூபாய் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் இன்று ஒரு நாளில் 25,657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 1,827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஒடிசாவிலிருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்து மெரினா பீச்சில் விற்பனை- 4 பேர் கைது

    அதன்மூலம் மொத்த பாதிப்பு 34,73,116 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து தற்போது 10,033 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 764 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 771 பேருக்கும், செங்கல்பட்டில் 316 பேருக்கும், கோயம்புத்தூரில் 85 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி