தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தின் நேர்முகத் தேர்வு திடீர் ஒத்தி வைப்பு... தேர்வுக்கு வந்தவர்கள் காத்திருப்பு போராட்டம்...

தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தின் நேர்முகத் தேர்வு திடீர் ஒத்தி வைப்பு... தேர்வுக்கு வந்தவர்கள் காத்திருப்பு போராட்டம்...

கட்டுமான வாரிய பதிவு எழுத்தர், ஓட்டுநர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால், தேர்வுக்கு வந்த பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ஏமாற்றமடைந்தனர். பணி நியமனத்தில் முறைகேடு நடப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

கட்டுமான வாரிய பதிவு எழுத்தர், ஓட்டுநர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால், தேர்வுக்கு வந்த பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ஏமாற்றமடைந்தனர். பணி நியமனத்தில் முறைகேடு நடப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

  • Share this:
தமிழ்நாடு கட்டுமான நலவாரிய பதிவுரு எழுத்தர் 32(ரெக்கார்ட் கிளார்க்), ஓட்டுநர் 37 உள்ளிட்ட 79  பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான  தேர்வுக் கட்டணம் ₹ 500 ஆன்லைன் மூலம் செலுத்தி  விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் தொழிலாளர் நல அலுவலகங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று முதல் 4 நாட்களுக்கு மொத்தம் 1, 700 பேருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு கடிதம் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. திருச்சி மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று காலை முதலே திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். காலை வரை நேர்முகத் தேர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை 8 மணிக்கு நிர்வாக காரணங்களால் நேர்முகத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டினர்.

இந்நிலையில், இன்று நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டதால், தேர்வர்கள் அதிருப்தியுடன் தொழிலாளர் நல திருச்சி உதவி ஆணையர் அலுவலகத்தில் காத்திருந்தனர். குறிப்பாக, சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தனர். மேலும் தேர்வை கடைசி நேரத்தில் ரத்து செய்து, முறைகேடு செய்ய திட்டம் என்றும் குற்றச்சாட்டினர்.

அப்போது காத்திருந்தவர்களிடம் தொழிலாளர் நல உதவி ஆணையர் மூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு அவர், அரசின் முடிவு நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. பணித்தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று உறுதியளித்தார். ஆனாலும் சமாதானம் அடையாமல் அங்கேயே நீண்ட நேரம் காத்திருந்தனர். அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொந்தளித்தனர். அவர்களுக்கு பதில் தர முடியாமல் உதவி ஆணையர் திணறினார்.

மேலும் படிக்க.,.. பயணிகள் சேவைகளுக்கான ஆய்வு: மதுரை விமான நிலையத்திற்கு 2ஆம் இடம்

மேலும் நலவாரியத்தில் தற்போது வரை நேர்முகத் தேர்வு ரத்து என்று வெளிப்படையான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது சந்தேகத்தை அதிகரிப்பதாக குற்றம்சாட்டினர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: