• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜாலியன் வாலபாக் படுகொலையை விட மோசமானது உ.பி வன்முறை - கே.எஸ்.அழகிரி காட்டம்

ஜாலியன் வாலபாக் படுகொலையை விட மோசமானது உ.பி வன்முறை - கே.எஸ்.அழகிரி காட்டம்

கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி

ஆங்கிலேய அரசு கூட படுகொலைக்கு பின் பஞ்சாப் செல்ல காங்கிரஸ் கட்சி தலைவர்களை அனுமதித்தனர்.

  • Share this:
    ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான கொலை நடந்துள்ளது என்றும் ஆங்கிலேயர்களையே விரட்டியடித்து வெற்றி பெற்றவர்கள் நாம் விரைவில் மோடியை வெற்றி பெறுவோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

    உத்திரபிரதேசம் விவசாயிகள் உயிரிழப்பை கண்டித்தும் அறுதல் கூற சென்ற பிரியங்காகாந்தியை கைது செய்ததை கண்டித்தும் கடலூர் மாவட்டம் புவனகிரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதுசெய்தியாளர்ளை சந்தித்த கே.எஸ் அழகிரி பேசுகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமான படுகொலையை உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.

    மத்திய அமைச்சரின் மகன் காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள் இறந்துள்ளனர் .அதனை தொடர்ந்து நடை பெற்ற கலவரத்தில் நான்கு விவசாயிகள் உட்பட 9 பேர் இறந்துள்ளனர். ஆங்கிலேய அரசு கூட படுகொலைக்கு பின் பஞ்சாப் செல்ல காங்கிரஸ் கட்சி தலைவர்களை அனுமதித்தனர். ஆனால் தற்போது பாதிக்பட்ட விவசாயிகளை சந்திக்கவும் உயிரிந்தவர்ள் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தியை அனுமதிக்காமவ் கைது செய்துள்ளனர்.

    Also Read : வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும்: ஸ்டாலின்

    அதே போல் சத்தீஷ்கர் மாநில முதல்வர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தபட்டுள்ளளார். இந்தியாவில் ஜனநாயகம் தவறானாவர்கள் கையில் சிக்கியுள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா முழுவதும் விவசாயிகள் பொதுமக்களும் மோடி அரசின் உன்மையான முகத்தை புரிந்துள்ளனர். இதனால் மோடி கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றார். ஆங்கிலேயர்களையே விரட்டியடித்து வெற்றி பெற்றவர்கள் நாம் எனவே விரைவில் மோடியையும் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: