விஜயகாந்துக்கு தமிழக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜயகாந்துக்கு தமிழக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்
  • Share this:
இதுகுறித்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அனுப்பிய வாழ்த்து செய்தியில், ”பிறந்த நாள் கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைப்படத் துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நன்முத்திரை பதித்து வரும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடுழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்றார்.

படிக்க: தமிழ் சினிமாவின் ஆச்சரியம்... நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று...! - சிறப்பு தொகுப்பு


மேலும் “ தங்களுக்கு எனது இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
First published: August 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading