Home /News /tamil-nadu /

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கேரளா பயணம் - பினராயி விஜயனை சந்தித்து பேச திட்டம்..

முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று கேரளா பயணம் - பினராயி விஜயனை சந்தித்து பேச திட்டம்..

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு.. முதல்வர் கேரளா பயணம்

தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு.. முதல்வர் கேரளா பயணம்

Southern Zonal Council meet : தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென்மண்டலக் குழுவாகும். இதன் 30வது கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை கேரளாவிற்கு புறப்பட்டு செல்கிறார்.

    தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென்மண்டலக் குழுவாகும்.

    மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இந்திய மாநில மறுசீரமைப்புச் சட்டம், ஆண்டு 1956இன் படி, இந்திய மாநிலங்களை ஆறு மண்டலக் குழுக்களாக பிரிக்கப்பட்டது.  தென்மண்டலக் குழுவில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் மற்றும்  நிகோபார் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளன.

    மண்டலத்திலுள்ள மாநிலங்களிடையே உள்ள பிணக்குகளை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கும் அவ்வப்போது கூட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி, தற்போது வரை 29 தென்மண்டலக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளது. நாளை (செப்டம்பர் 3), 30வது கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்க இருக்கிறது.

    இதையும் வாசிக்கநாடு முழுவதும் 10,12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு பொது மதிப்பீடு: மத்திய அரசு தீவிரம்

    இதில், கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை 11.40 மணி அளவில் இண்டிகோ விமானம் மூலம் கேரளா புறப்படுகிறார். பின்னர், கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து  முல்லைப்பெரியாறு, சிறுவாணி, நெய்யாறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளார். ​

    நாளை, நடைபெறும் தென்மண்டலக் குழு கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: CM MK Stalin, MK Stalin

    அடுத்த செய்தி