என்னை சந்திக்க வருவோர் பூங்கொத்து, பொன்னாடையைத் தவிர்க்கவும், புத்தகம் போதும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

கருணை உள்ளத்துடன், முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அதற்காக என்னை சந்திக்கவும், வாழ்த்து தெரிவிக்கவும் வருவோர், பூங்கொத்து, பொன்னாடை களை தவிர்க்கவும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

  • Share this:
    கருணை உள்ளத்துடன், முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அதற்காக என்னை சந்திக்கவும், வாழ்த்து தெரிவிக்கவும் வருவோர், பூங்கொத்து, பொன்னாடை களை தவிர்க்கவும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்பு வேண்டுகோள் வைத்துள்ளார்.

    இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

    பெருந்தொற்று, நாட்டையும், நாட்டு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள, தமிழக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவ கட்டமைப்புகளின் வழியே நோய் தொற்றிலிருந்து மீளவும், முழு ஊரடங்கு காரணமாக தொற்று பரவாமல் தடுக்கவும், அரசு களப்பணியாற்றி வருகிறது.கொரோனா தடுப்பு பணிகளுக்கான கூடுதல் செலவினங்களுக்கு பயன்படுத்தி கொள்ள, கருணை உள்ளத்துடன், முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அதற்காக என்னை சந்திக்கவும், வாழ்த்து தெரிவிக்கவும் வருவோர், பூங்கொத்து, பொன்னாடை களை தவிர்க்கவும்.

    பொதுவாக இவற்றை தவிர்த்து, புத்தகங்கள் வழங்குங்கள் என்று, நான் தொடர்ந்து வலியுறுத்தி வருபவன்.எனவே பூங்கொத்துகள், பொன்னாடைகள் தருவதை உறுதியாக தவிர்க்கவும். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, அவரவர் மாவட்டங்களுக்கும், சொந்த தொகுதிகளுக்கும் சென்று, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும்படி கேட்டுக் கொண்டேன்.

    அதன்படி சென்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு, வரவேற்புகள் தரப்பட்டதாக செய்திகள் வருகின்றன. தொற்றுக் காலத்தில், இது போன்ற வரவேற்பை முழுமையாக தவிர்க்க வேண்டும்.வரவேற்பு வளைவுகள், பதாகைகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.இக்கட்டுப்பாடுகளை மீறுவோரை, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கண்டிக்க வேண்டும்.

    கொரோனா பெருந்தொற்று பரவி வரும் இந்த நெருக்கடியான காலத்தில், அதிலிருந்து மக்களை காப்பாற்றும் பெரும் பொறுப்பில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். நாம் நமது செயல்களின் வழியே மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடிப்போம். நின்று நிலைபெறும் சாதனைகளின் வழியே மக்களின் அன்பை பெறுவோம்.

    இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published: