மெடிக்கலுக்கு சென்றவரிடம் அபராதம்... வீட்டுக்கே வந்து பணத்தை திருப்பிக்கொடுத்து மன்னிப்பு கேட்ட போலீஸ்!

அபராதத் தொகை திருப்பி அளிப்பு.

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையிடம் 500 ரூபாய் அபராதம் விதித்த விவரத்தை டுவிட்டரில் அறிந்த தமிழக முதலமைச்சர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து நான்கு மணி நேரத்தில் குடும்பத்தினரிடம் பணத்தையும் மருந்து மாத்திரைகளையும் சேர்த்து வழங்கி மன்னிப்பு கேட்டதால் நெகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் முதலமைச்சருக்கும் காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையிடம் 500 ரூபாய் அபராதம் விதித்த விவரத்தை டுவிட்டரில் அறிந்த தமிழக முதலமைச்சர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டதை அடுத்து நான்கு மணி நேரத்தில் குடும்பத்தினரிடம் பணத்தையும் மருந்து மாத்திரைகளையும் சேர்த்து வழங்கி மன்னிப்பு கேட்டதால் நெகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் முதலமைச்சருக்கும் காவல்துறையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்

  திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பாலசந்திரன் என்கிற பாலாஜி என்ற நபரிடம் தலைக்கவசம் இன்றி இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்ததால் ஊரடங்கு ரோந்துப்பணியில் இருந்த காவல்துறையினர் ரூ.500 அபராதம் விதித்தனர்.

  அவர் ட்விட்டர் சமூக வலைதளத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இதனை வருத்தத்துடன் தெரியப்படுத்த  அதனை பார்த்த  முதல்வர் ஸ்டாலின்  நடவடிக்கைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து நான்கு மணி நேரத்தில் எஸ் எஸ் ஐ வெங்கடேசன் என்பவர் அபராதமாகப் பெற்ற 500 ரூபாய் பணம் சம்பந்தப்பட்ட நபரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. . திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் மேலும் இவரது மகனுக்கு மருந்து மாத்திரைகளையும் வாங்கி வழங்கியதுடன் அவரிடம் மன்னிப்பு கோரினர்.  முதலமைச்சர் ஸ்டாலின் தங்களது பதிவை பார்த்து நான்கு மணி நேரத்தில் உதவியதுடன் பணத்தையும் திருப்பி அளித்ததால் நெகிழ்ந்து போன குடும்பம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

  திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட காவலர்கள் எஸ் எஸ் ஐ வெங்கடேசன் பெற்று சென்ற 500 ரூபாயை அச்சிறுவனின் தந்தையிடம் வீட்டிற்கே சென்று வழங்கினார் இதுகுறித்து நெகிழ்ந்து போன அவர்களது குடும்பத்தினர் தமிழக முதலமைச்சர் இருக்கும் தமிழக காவல் துறையினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

  தனது மகனுக்காக மருந்து வாங்க மருந்தகத்திற்கு சென்ற பாலசந்திரனை திருவள்ளூர் பழைய ஆட்சியரகம் அருகே சாலையில் வைத்து மடக்கிய திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன் அவரிடமும் தலைக்கவசம் இன்றி செல்கிறீர்கள் உங்களுக்கு அபராதம் விதிக்கிறேன் என்று கூறி 500 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி உள்ளார்.

  தனது மகனது மருத்துவ செலவுக்கு வைத்துள்ள இந்த பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்றும் கேட்ட பாலாஜியிடம் பணத்தை தராததால் மன விரக்தியில் வீட்டிற்குச் சென்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வேதனையை பதிவிட்டு காவல்துறையில் இதுபோன்று தொடர்ந்து செயல்படுவது மனவேதனை அளிப்பதாக தெரிவித்திருந்தார், இதனையடுத்து முதல்வர் தலையிட்டு அபராதத்தொகையை திருப்பி தர ஏற்பாடு செய்ததற்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
  Published by:Muthukumar
  First published: