உங்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் நோயைத் தடுக்கமுடியாது - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

உங்கள் ஒத்துழைப்பு இல்லையென்றால் நோயைத் தடுக்கமுடியாது - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:
மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது.  பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக்கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.


எனவே, பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also see... 

ஊரடங்கு நீட்டிப்பு: சென்னையில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?எந்தெந்த ஊரில் பஸ் ஓடும்? இ-பாஸ் தேவைப்படும் பகுதிகள் எவை? முழு விவரம்

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தனியார் ராக்கெட்

 
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading